கடலூர் மாவட்ட |சட்ட ஆணைக்குழுவில் பணிபுரிய |ஆசையா உடனே விண்ணப்பியுங்கள் .2024

 



மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். 

கடலூர் :-

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்டப் சட்டப் பணிகள் குழுவில் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள்  அனுப்பலாம் என்று கடலூர் மாவட்டப் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் ,முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கடலூர் மாவட்டத்தில் ,சிதம்பரம் ,விருத்தாசலம் நெய்வேலி பண்ரூட்டி திட்டக்குடி கட்டுமன்னார் கோவில் ,பரங்கி பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ,நீதிமன்றங்களில் இயங்கிவரும் வட்ட சட்டப் பணிகள் குழுவிலும் சட்டப் தன்னார்வலர்களாக பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் ஆசிரியர்கள் (ஓய்வு  பெற்ற ஆசிரியர்கள் உட்பட ) ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மூத்த குடிமக்கள் எம். எஸ். டபிள்யூ ,பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் பணியாளர்கள் கீழே பின்வருமாறு 

*ஆசிரியர்கள் 

*அங்கன்வாடி பணியாளர்கள் 

*மருத்துவர்கள் 

*உடல்நல நிபுணர்கள் 

*வழக்கறிஞர்களாக மற்றும் சட்டக்கல்லூரி பதிவு செய்யும் வரை ) அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ,மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சேவை சார்ந்த இப்பணிக்கு சம்பளம் ,தொகுப்பூதியம் தினக் கூலி கிடையாது ,விண்ணப்பபடிவங்களை கடலூர் மாவட்டத் நீதி மன்றத்தின் 

. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் உள்ளவாறு அந்தந்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ மே 20 -ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் . 

மேலும் சட்ட தன்னார்வலர்களுக்கான நேர்முகத் தேர்வு மே 24-ம் தேதி காலை 10.30 மணியளவில் அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் இணைத்துள்ள ஆவணங்களின் அசல் ஆவணங்களை எடுத்துக்கொண்ட காலை 9.30 மணியளவில் அந்தந்த நீதிமன்ற . நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .      


இணையதள முகவரி                :- Click Here

மேலும் தகவல் தொடர்புக்கு :- Click Here

Post a Comment

0 Comments